ஹூக்கா விடுதிகளுக்கு தடை: மாநில அரசு விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ்
கடந்த அக்டோபர் மாதம் மாநில அரசு, மராட்டியத்தில் ஹூக்கா விடுதிகள் செயல்பட தடை விதித்தது.
மும்பை,
மும்பை பரேல், கமலா மில் வளாகத்தில் உள்ள ஓட்டல்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பயங்கர தீ விபத்தில், 14 பேர் பலியானார்கள். இதையடுத்து நடந்த விசாரணையில், அந்த வளாகத்தில் செயல்பட்டு வந்த ‘‘ஹூக்கா’’ விடுதியால் தான் விபத்து நடந்தது தெரியவந்தது.
இந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் மாநில அரசு, மராட்டியத்தில் ஹூக்கா விடுதிகள் செயல்பட தடை விதித்தது.
மாநில அரசின் இந்த தடையை எதிர்த்து ஹூக்கா விடுதி உரிமையாளர்கள் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து உள்ளனர்.
இந்த மனுக்களை விசாரித்த ஐகோர்ட்டு, ஹூக்கா விடுதிகளுக்கு தடை விதித்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.