ரெயில் பெட்டியில் விளம்பர போஸ்டர் ஒட்ட முயன்ற 4 பேர் கைது

ரெயில்களில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2018-11-27 21:41 GMT

வசாய்,

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள விரார் ரெயில்வே பணிமனையில் மின்சார ரெயில்களில் சிலர் போஸ்டர் ஒட்ட வருவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது, பணிமனைக்கு வந்த ஒரு மின்சார ரெயிலில் போஸ்டர் ஒட்ட முயன்ற 3 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த போஸ்டர்களையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்களது பெயர் ரஷித்(வயது27), சாகிப்(18), மகபூப் சபீர்(29) என்பது தெரியவந்தது. நாலச்சோப்ராவை சேர்ந்த ரியாஸ் சவுகான் என்பவர் அவர்களை போஸ்டர்களை ஒட்ட அனுப்பி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்