சம்பளம்–போனஸ் வழங்கக்கோரி பாரதி– சுதேசி மில் தொழிலாளர்கள் மனித சங்கிலி

சம்பளம் மற்றும் போனஸ் வழங்கக்கோரி பாரதி–சுதேசி மில் தொழிலாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-11-27 22:15 GMT

புதுச்சேரி,

சுதேசி, பாரதி மில் தொழிலாளர்களுக்கு சம்பளம், போனஸ் வழங்குவதற்கான கோப்பை திருப்பி அனுப்பிய கவர்னரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரியும் சுதேசி, பாரதி மில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நேரு வீதியில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேரு வீதி–காந்தி வீதி சந்திப்பில் தொடங்கிய இந்த மனித சங்கிலி நேருவீதி–மி‌ஷன் வீதி சந்திப்பு வரை நடந்தது.

இந்த போராட்டத்தில் ஐ.என்.டி.யு.சி. மாநில தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ஞானசேகரன், ஏ.ஐ.டி.யு.சி. அபிசேகம், அண்ணா தொழிற்சங்க பாப்புசாமி, என்.ஆர்.தொழிற்சங்க மோகன்தாஸ், பஞ்சாலை தொழிலாளர் சங்க குப்புசாமி, சி.ஐ.டி.யு. தேவராசு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த கட்டமாக தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பளம், போனஸ் வழங்கக்கோரி அதிகாரிகளின் வீடுகளை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்