என்.எல்.சி. தொழிலாளர்களுடனான பேச்சுவார்த்தை நிர்வாகம் புறக்கணிப்பு

தொழிலாளர் பிரச்சினை தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையை என்.எல்.சி. நிர்வாகம் புறக்கணித்தது.

Update: 2018-11-27 22:30 GMT

மூலக்குளம்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களை காலதாமதம் செய்யாமல் பணிநிரந்தரம் செய்யவேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை தன்மையை கருத்தில்கொண்டு பதவி உயர்வு அளிக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு புதுவை உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக உதவி ஆணையர் கணேசன், பிற்படுத்தப்பட்டோர் தொழிலாளர் நலச்சங்கத்தின் சிறப்பு தலைவர் வீரவன்னியராஜா, அமைப்பாளர் டெல்டா விஜயன், தலைவர் வெங்கடேசன், பொதுச்செயலாளர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

ஆனால் என்.எல்.சி. நிர்வாக தரப்பில் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அதிர்ச்சியடைந்தனர். என்.எல்.சி. நிர்வாக தரப்பில் அதிகாரிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பு செய்தற்கு கண்டனம் தெரிவிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் உதவி ஆணையர் கணேசனிடம் அவர்கள், தொழிலாளர்கள் பிரச்சினைகளை முன்வைத்தனர். மேலும் பணியிடங்களுக்கான இடஒதுக்கீடு குறித்தும் வலியுறுத்தினார்கள். கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகத்திடம் முறையிட்டு உடனடியாக தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக உதவி ஆணையர் கணேசன் அவர்களிடம் உறுதியளித்தார்.

மேலும் செய்திகள்