திருவள்ளூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவள்ளூர் அருகே வங்கி ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

Update: 2018-11-27 22:30 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பெரியக்குப்பம் கற்குழாய் தெருவை சேர்ந்தவர் பழனி (வயது58). தனியார் வங்கி ஊழியர். நேற்று முன்தினம் பழனி வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகைகளும், ½ கிலோ வெள்ளி பொருட்களும் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து பழனி திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் ஏலம்பாக்கத்தை சேர்ந்தவர் தருமன் (38).தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் தருமன், அவரது மனைவி கீதா ஆகியோர் வழக்கம் போல வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். இரவு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 பவுன் நகையும், ரூ.60 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து தருமன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்