கிடாவெட்டு பூஜையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே கிடாவெட்டு பூஜையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டார்.

Update: 2018-11-26 22:00 GMT
வி.கைகாட்டி, 

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே பெரிய நாகலூர் கிராமத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் கிடா வெட்டு பூஜை நடந்தது. இதில் அதே பகுதியை சேர்ந்த செங்கமுத்து (வயது 85), அவரது உறவினரான மணிகண்டன்(30) உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது செங்கமுத்துவுக்கும், மணிகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், செங்கமுத்துவை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த கயர்லாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செங்கமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்