மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சமூகநீதி மாநாடு தொல்.திருமாவளவன் பங்கேற்பு
செம்பூரில் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சமூகநீதி மாநாடு நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.
மும்பை,
செம்பூரில் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சமூகநீதி மாநாடு நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார்.
சமூகநீதி மாநாடு
மும்பை செம்பூர் ஆர்.சி.மார்க் பைன் ஆர்ட்ஸ் ஆடிட்டோரியம் சிவசாமி குளிர் அரங்கத்தில் மும்பை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சமூக நீதி மாநாடு நடந்தது. மாநாட்டுக்கு மும்பை பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மும்பை திராவிடர் கழக தலைவர் பெ.கணேசன் வரவேற்று பேசினார். மும்பை புறநகர் தி.மு.க. பேச்சாளர் முகமது அலிஜின்னா தொடக்க உரையாற்றினார்.
புனே மகாத்மா புலே அறக்கட்டளையை சேர்ந்த நீதிபாய் புலே, நாசிக் சந்திப் பல்கலைக்கழக துணைவேந்தர் கர்னல் நல்.ராமச்சந்திரன், எம்.ஐ.டி.சி. தலைமை நிர்வாக அதிகாரி பொன்.அன்பழகன், கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., மராட்டிய மாநில விடுதலை சிறுத்தைகள் அமைப்பு செயலாளர் கனகராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், வக்கீல் அருள்மொழி ஆகியோர் மாநாட்டு சிறப்புரையாற்றினார்கள்.
‘ஏன் அவர் பெரியார்?’ என்ற தலைப்பில் தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன் பேசினார்.
தந்தை பெரியார், அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா புலே, வி.பி.சிங் ஆகியோரது படங்கள் திறக்கப்பட்டது. பெரியார், அம்பேத்கர் வினா-விடை போட்டியில் பங்கேற்ற மும்பை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மும்பை தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் பரிசு வழங்கினார்.
பம்பாய் திருவள்ளுவர் மன்ற நிறுவனர் தேவதாசனுக்கு திராவிட பெருந்தகை விருது வழங்கப்பட்டது. ‘ஜாதி, மத வாதத்தை முறியடிப்போம், சமூக நீதிக்கொடியை உயர்த்தி பிடிப்போம்' என்ற தலைப்பில் கழக வெளியுறவு செயலாளர் குமரேசன், தமிழ் இலெமுரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன், மும்பை புறநகர் தி.மு.க. செயலாளர் அலிசேக் மீரான், மும்பை தி.மு.க. பொறுப்பாளர் கருவூர் பழனிச்சாமி, பேராசிரியர் சமீராமீரான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மும்பை மாநகர செயலாளர் சாலமன் ராசா ஆகியோர் பேசினர்.
எழுத்தாளர் புதிய மாதவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் பரமசிவம், சசிகுமார் நன்றி கூறினர்.