கூடுவாஞ்சேரியில் தி.மு.க. பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
கூடுவாஞ்சேரியில் தி.மு.க. பிரமுகர் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி நந்திவரம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 46). முன்னாள் கவுன்சிலர். தி.மு.க. பிரமுகரான இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இவர் நேற்று இரவு 11 மணி அளவில் தனது வீட்டில் இருந்து பெருமாட்டுநல்லூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அதே பகுதியில் சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் மோகனை வழிமறித்தனர்.
இதனால் பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் அவர்கள் மோகனை விரட்டிச்சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் மோகன் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.