நெல்லை சந்திப்பில் ரெயில்வே பிளாட்பாரத்தில் நடந்து சென்ற பெண் திடீர் சாவு

நெல்லை சந்திப்பு ரெயில்வே பிளாட்பாரத்தில் நடந்து சென்ற பெண் திடீரென்று கீழே விழுந்து இறந்தார்.

Update: 2018-11-25 22:00 GMT
நெல்லை, 

நெல்லை சந்திப்பு ரெயில்வே பிளாட்பாரத்தில் நடந்து சென்ற பெண் திடீரென்று கீழே விழுந்து இறந்தார்.

மயங்கி விழுந்தார்

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நேற்று காலை சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அந்த ரெயிலில் இருந்து இறங்கிய பெண் ஒருவர், செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் ஏறுவதற்காக முதலாவது பிளாட்பாரத்தை கடந்து 2-வது பிளாட்பாரம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த பெண் அருகில் சென்று மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அந்த பெண் கீழே விழுந்த உடன் இறந்து விட்டார் என்பது தெரியவந்தது.

பாவூர்சத்திரம் பெண்

இதை அறிந்த சந்திப்பு ரெயில்வே போலீசார் பிளாட்பாரத்துக்கு விரைந்து வந்தனர். அந்த பெண்ணிடம் இருந்த ஆதார் அட்டை மற்றும் செல்போன் ஆகியவற்றை கொண்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நாடாக்கண்பட்டியை சேர்ந்த பரமசிவன் மனைவி பத்திரகாளி (வயது 60) என்பது தெரிய வந் தது.இதையடுத்து பத்திரகாளி உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்