சென்னை விருகம்பாக்கத்தில் பெட்ரோல் பங்கில் ரூ.60 ஆயிரத்துடன் ஊழியர் ஓட்டம்

நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டு இருந்த தனசேகர், பெட்ரோல் விற்பனையான ரூ.60 ஆயிரத்துடன் மாயமானார்.

Update: 2018-11-24 21:30 GMT
பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், ஆழ்வார் திருநகரைச் சேர்ந்தவர் சுந்தர்(வயது 40). இவர், விருகம்பாக்கத்தில் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார். இங்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடியாத்தத்தை சேர்ந்த தனசேகர்(29) என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.

நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டு இருந்த தனசேகர், பெட்ரோல் விற்பனையான ரூ.60 ஆயிரத்துடன் மாயமானார். எங்கு தேடியும் அவரை காணவில்லை. இது குறித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், தனசேகர் ஏற்கனவே ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்து உள்ளார். அங்கு ரூ.1 லட்சத்துடன் தலைமறைவான அவர், சுந்தரின் பெட்ரோல் பங்கில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். இங்கும் அவர் கைவரிசையை காட்டி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. பணத்துடன் தப்பி ஓடிய தனசேகரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்