ஜோகேஸ்வரியில் மாணவியை மானபங்கம் செய்த டியூசன் ஆசிரியர் கைது

ஜோகேஸ்வரியில் மாணவியை மானபங்கம் செய்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-23 23:00 GMT
மும்பை, 

ஜோகேஸ்வரியில் மாணவியை மானபங்கம் செய்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மாணவி மானபங்கம்

மும்பை ஜோகேஸ்வரி கிழக்கு பகுதியில் ரேகன் அப்துல் ரகுமான் அன்சாரி(வயது46) என்பவர் டியூசன் நடத்தி வருகிறார். இவரிடம் அந்த பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் டியூசன் படித்து வருகிறார். சம்பவத்தன்று டியூசன் முடிந்ததும் மாணவியை அவர் தனது அறைக்கு அழைத்தார். அங்கு சென்றதும் மாணவியிடம் உனது உயரம் எவ்வளவு எனகேட்டு உள்ளார். ஆனால் மாணவியால் தனது உயரத்தை சரியாக கூற முடியவில்லை.

தான் அளந்து பார்ப்பதாக கூறி அவர் மாணவியின் உடலில் தொடக்கூடாத இடத்தை தொட்டு மானபங்கம் செய்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி சத்தம்போட முயன்றாள். உடனே அவர் மாணவியின் வாயை பொத்தி மானபங்கம் செய்து உள்ளார்.

டியூசன் ஆசிரியர் கைது

இருப்பினும் மாணவி அவரிடம் இருந்து தப்பி வீட்டுக்கு வந்து நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் மகளை ஓஷிவாரா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று புகார் கொடுத்தார். போலீசார் ரேகன் அப்துல் ரகுமான் அன்சாரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். விசாரணையின் போது, அவர் மாணவியை மானபங்கம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு அவரை வருகிற 27-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்