‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1½ கோடி நிவாரணம் - அமைச்சர் சி.வி.சண்முகம் அனுப்பி வைத்தார்
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ரூ.1½ கோடியில் நிவாரண பொருட்களை அமைச்சர் சி.வி.சண்முகம் அனுப்பி வைத்தார்.
விழுப்புரம்,
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
அந்த வகையில் விழுப்புரம் வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தெற்கு மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு 150 டன் அரிசி மூட்டைகள், வேட்டி- சேலை, போர்வைகள், பாய்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிஸ்கட்டுகள், ரொட்டிகள், பேஸ்ட், பிரஸ், சோப்பு, மெழுகுவர்த்தி, கொசுவர்த்திகள் என 15 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக ரூ.1½ கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை 23 லாரிகள் மூலமாக அனுப்பி வைத்தனர். அப்போது சக்கரபாணி எம்.எல்.ஏ., முன்னாள் தெற்கு மாவட்ட செயலாளர் கதிர்.தண்டபாணி, ஆவின் தலைவர் பேட்டை முருகன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், முத்தமிழ்செல்வன், மணிராஜ், ராஜசேகர், ராஜேந்திரன், பழனி, துரை, அரசு, முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, நகரமன்ற முன்னாள் கவுன்சிலர் வண்டிமேடு ராமதாஸ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், இயக்குனர் வக்கீல் செந்தில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் மாரங்கியூர் இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.