மனநலம் பாதித்த பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் நண்பர்களுக்கும் விருந்தாக்கிய கொடூரம்

மனநலம் பாதித்த பெண்ணை கடத்தி கற்பழித்ததுடன், நண்பர்களுக்கும் விருந்தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-23 23:00 GMT
மும்பை,

மனநலம் பாதித்த பெண்ணை கடத்தி கற்பழித்ததுடன், நண்பர்களுக்கும் விருந்தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் மாயம்

மும்பை தின்தோஷி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 18 வயது இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். கடந்த 14-ந் தேதி இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டார். பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் மலாடு அக்சா கடற்கரை பகுதியில் உள்ள கோவிலில் அந்த பெண் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணை மீட்டனர்.

வாலிபர் கைது

விசாரணையில், வெர்சோவா குடிசை பகுதியை சேர்ந்த ராஜூ நேபாளி(வயது24) என்ற வாலிபர் இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி கடத்திச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து இளம்பெண்ணுக்கு தாலிகட்டி தங்கும் விடுதிக்கு அழைத்து சென்று கற்பழித்து உள்ளார்.

பின்னர் அந்த பெண்ணை தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கினார். இதையடுத்து இளம்பெண்ணின் கழுத்தில் கிடந்த தாலியை பறித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இளம்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரை கற்பழித்த ராஜூ நேபாளியை கைது செய்தனர். தலைமறைவான அவரது நண்பர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்