சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் தரிசனம்

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் நேற்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2018-11-23 21:45 GMT
கோவில்பட்டி, 

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் நேற்று கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

அதிகாலையில் நடைதிறப்பு

திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, விழாக்கோல் பூண்டு இருந்தது. காலையில் மூலவர் கதிர்வேல் முருகன் மற்றும் கார்த்திகேயர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மகா தீபம் ஏற்றப்பட்டது

மாலையில் கோவில் வளாகத்தில் பெரிய வெண்கல அக்னி சட்டியில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும் கோவிலில் ஏராளமான இடங்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் கார்த்திகேயர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் மயில் வாகனத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கட்டளைதாரரான நாடார் உறவின்முறை சங்க தலைவர் பழனிசெல்வம் குடும்பத்தினர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்