திருப்பத்தூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம்

திருப்பத்தூர் அருகே அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2018-11-23 22:30 GMT

திருப்பத்தூர்,

திண்டுககல் மாவட்டம் பழனியில் இருந்து நேற்று திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு ஒரு அரசு பஸ் சென்றது. அந்த பஸ்சில் 47 பயணிகள் இருந்தனர். பஸ் திருப்பத்தூரை அடுத்துள்ள கும்மங்குடி இரட்டை பாலம் அருகே சென்ற போது அந்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது பஸ் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென பிரேக பிடிககாததால் பஸ் நிலைதடுமாறி ஓடியது. அதில் டிரைவர் பஸ்சை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்குள், அருகில் இருந்த பாலத்தின் மீது மோதியதில், ரோட்டில் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டின் அருகில் இருந்த பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.

இதில் திண்டுககல் மாவட்டம் நரசிங்கபுரத்தைச்சேர்ந்த பஸ் டிரைவர் உத்திரப்பன் (வயது 54), லட்சுமிசுந்தரம் பகுதியைச் சேர்ந்த கண்டக்டர் கணேசன் (33) உள்பட 15 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிககப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுககல்லை சேர்ந்த ராஜேந்திரன், திருப்பத்தூரை சேர்ந்த காதர்பாட்சா (45) உள்பட 3 பேர் சிவகங்கை அரசு மருத்துவககல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் குமார் வழககு பதிவு செய்து விசாரித்து வருகிறார். விபத்து நடந்த போது, அந்த வழித்தடத்தில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ககப்பட்டது. பின்னர் சேதமடைந்த மின்கம்பத்தை மின்துறை ஊழியர்கள் உடனடியாக சரிசெய்தனர்.

மேலும் செய்திகள்