வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படும் தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி
வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வி.வி.பாட் (யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும்) எந்திரம் ஆகியவற்றின் செயல் விளக்கம் நேற்றுக்காலை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தலைமை தாங்கி வாக்குப்பதிவு எந்திரத்தை இயக்கி செயல் விளக்கம் அளித்தார். இதில் இணை தலைமை தேர்தல் அதிகாரி குமார், மாவட்ட துணை தேர்தல் அதிகாரி தில்லைவேலு மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் காரைக்காலில் 1 தொகுதியிலும், புதுச்சேரியில் 3 தொகுதியிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்பட்டது. இந்த எந்திரத்தில் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு பேப்பரில் தெரியப்படுத்தும். வாக்காளர் பார்த்த பின்னர் அந்த பேப்பர் துண்டிக்கப்பட்டு எந்திரத்திற்குள் விழுந்துவிடும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்துவதற்காக 2,400 வாக்குப்பதிவு எந்திரங்களும், 1200 வி.வி.பாட் எந்திரங்களும் புதுவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வி.வி.பாட் எந்திரம் பயன்படுத்தப்படும்.
மின்னணு வாக்குப்பதிவில் யாருக்கு வாக்களித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதன் மூலம் மேலும் நம்பகத்தன்மை ஏற்படும். வி.வி.பாட் குறித்து பொதுமக்களிடமும், அரசியல் கட்சியினரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அனைத்து கட்சிகளும் வி.வி.பாட் குறித்து ஆதாரமற்ற சந்தேகங்களை எழுப்பி, மக்களை குழப்பி வருகின்றன. சந்தேகத்தை தீர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களையும், வி.வி.பாட் எந்திரங்களையும் செல்போன், வயர்லெஸ் கருவி உள்ளிட்ட எந்த மின்னணு கருவிகளாலும் இயக்க முடியாது. தட்டாஞ்சாவடி தொகுதி காலியாக உள்ளது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்து உள்ளோம். 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்தவேண்டும் என்ற விதிமுறைப்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. தற்போதும் புதிய வாக்காளர்கள் சேர்க்கும் முகாம் நடத்தி வருகின்றோம். ஜனவரி 4-ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 10 எண்கள் கொண்ட புதிய வாக்காளர் அடையாள அட்டை தரும் பணி 65 சதவீதம் முடிந்துள்ளது. இதில் முதல் முறையாக வாக்காளர் அடையாள அட்டை கேட்பவர்களுக்கு இலவசமாக தருகின்றோம். தொலைந்துவிட்டதன் காரணமாக மீண்டும் கேட்கும்போது ரூ.25 கட்டணம் வசூலித்து தருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.