பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் உண்ணாவிரதம்

நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Update: 2018-11-22 22:30 GMT
நாகர்கோவில்,

அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்க நாகர்கோவில் கிளை சார்பில் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்தது போல், பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கும் ஓய்வூதிய மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் செல்லையா தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்