லால்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
லால்குடியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
லால்குடி,
லால்குடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி, தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் லால்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பாலு தலைமை தாங்கினார்.
விவசாய சங்க மத்திய குழு உறுப்பினர் சந்திரன், விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஜெகதீசன், ரஜினி, ஒன்றிய தலைவர் சீதாராமன், பொருளாளர் மணிகண்டன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமும், சேதமடைந்த வாழைகளை சீரமைக்க ரூ.50 ஆயிரமும் வழங்க வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட வாழைகளுக்கு உடனடியாக இழப்பீடு பெற்று தர வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் இருந்து விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மீண்டும் விவசாயம் செய்ய வங்கிகள் கடன் வழங்க வேண்டும், என்று கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை லால்குடி தாசில்தார் சத்யபால கங்காதரனிடம், விவசாய அமைப்பினர் கொடுத்தனர்.