பிசான பருவ சாகுபடிக்கு நம்பியாறு-கொடுமுடியாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அமைச்சர் ராஜலட்சுமி பங்கேற்பு

பிசான பருவ சாகுபடிக்கு நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளில் இருந்து அமைச்சர் ராஜலட்சுமி தண்ணீர் திறந்து வைத்தார்.

Update: 2018-11-22 22:30 GMT
திசையன்விளை, 

பிசான பருவ சாகுபடிக்கு நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளில் இருந்து அமைச்சர் ராஜலட்சுமி தண்ணீர் திறந்து வைத்தார்.

நம்பியாறு- கொடுமுடியாறு

நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகா நம்பியாறு அணை மற்றும் நாங்குநேரி தாலுகா கொடுமுடியாறு அணையில் இருந்து பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை வந்ததை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணைகளை திறந்துவிட உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து நேற்று நம்பியாறு அணையில் இருந்து அமைச்சர் ராஜலட்சுமி தண்ணீரை திறந்து வைத்தார். இதே போல் கொடுமுடியாறு அணையில் இருந்தும், அமைச்சர் ராஜலட்சுமி தண்ணீரை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், “நம்பியாறு அணை திறப்பின் மூலம் திசையன்விளை தாலுகாவில் 1744.55 ஏக்கர் நிலங்களும், கொடுமுடியாறு அணை திறப்பின் மூலம் நாங்குநேரி மற்றும் ராதாபுரம் தாலுகாவை சேர்த்து 5780.91 ஏக்கர் நிலங்களும் நேரடி மற்றும் மறைமுக பாசன வசதி பெறும். அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை பிசான சாகுபடிக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்படும்“ என்றார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷில்பா, இன்பதுரை எம்.எல்.ஏ., சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், ராதாபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமல்ராஜா, நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெயக்குமார், திசையன்விளை கூட்டுறவு சங்க தலைவர் பாலன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் காபிரியேல் ஜெபராஜன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஜெயபாலன், உதவி பொறியாளர்கள் மதனசுதாகர், மூர்த்தி பாஸ்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்