புயல் நிவாரணம் வழங்குவதை தடுத்த அ.தி.மு.க.வினர் தொண்டு நிறுவனத்தினர் சாலை மறியலால் பரபரப்பு
புதுக்கோட்டை அருகே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதை அ.தி.மு.க.வினர் தடுத்ததாக கூறி தொண்டு நிறுவனத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தை கடந்த 16-ந் தேதி அதிகாலை கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்த லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சாய்ந்தன. இதனால் மின்சாரம் தடைபட்டுள்ளது. மேலும் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கோழிப்பண்ணைகள், மீனவர்களின் விசைப்படகுகள், மீன்பிடி வலைகள் உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பல்வேறு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை சார்பில் நிவாரண பொருட்கள், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு வரப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறகுகள் அமைப்பு என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்பட்ட அரிசி, தார்ப்பாய், பால் பவுடர், மருந்துகள், டார்ச் லைட் உள்பட சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஈரோட்டில் இருந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வந்தனர்.
நிவாரண பொருட்களை பார்வையிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு சென்று அவற்றை வழங்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து சிறகுகள் அமைப்பினருடன், செம்பட்டிவிடுதியை சேர்ந்த 3 அ.தி.மு.க. நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க சென்றனர். சிறகுகள் அமைப்பினர், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுவயல், அரிமளம், தேத்தான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க முடிவு செய்திருந்தனர். ஆனால் அவர்களுடன் வந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், ‘நீங்கள் இஷ்டப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கக்கூடாது, நாங்கள் சொல்லும் பகுதியில் தான் நிவாரண பொருட்களை வழங்க வேண்டும்‘ என்று கூறி, ஆலங்குடி அருகே உள்ள செம்பட்டிவிடுதி 4 ரோட்டிற்கு அழைத்து சென்றனர்.
அப்பகுதியில் உள்ள 2 கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை அந்த அமைப்பினர் வழங்கினர். பின்னர் அவர்கள் அ.தி.மு.க. நிர்வாகிகளிடம், ‘நீங்கள் கூறிய கிராமங்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் வழங்கி விட்டோம். எனவே நாங்கள் திட்டமிட்டிருந்தபடி புதுவயல், அரிமளம், தேத்தான்பட்டி பகுதிகளுக்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்க போகிறோம்‘ என்று கூறினர். ஆனால் அ.தி.மு.க. நிர்வாகிகள், ‘நீங்கள் அங்கு சென்று நிவாரண பொருட்கள் வழங்க முடியாது. நிவாரண பொருட்களை இங்கேயே வைத்துவிட்டு செல்லுங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் வழங்கி கொள்கிறோம்‘, என்றனர்.
இதனால் சிறகுகள் அமைப்பினருக்கும், அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திட்டமிட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அ.தி.மு.க. நிர்வாகிகள் வழங்க விடாமல் தடுத்ததை கண்டித்து சிறகுகள் அமைப்பினர் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை டவுன் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையிலான போலீசார் அங்கு வந்து இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, ஈரோடு சிறகுகள் அமைப்பினர் போலீஸ் பாதுகாப்புடன் செம்பட்டிவிடுதி 4 ரோடு பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர். அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறிய பகுதிகளுக்கே நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து சிறகுகள் அமைப்பின் செயலாளர் சீனிவாசன் கூறியதாவது:-
நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக நிவாரண பொருட்களை வழங்குவதற்காகத்தான் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை சேகரித்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால் எங்களுடன் வந்த அ.தி.மு.க.வினர், நாங்கள் திட்டமிட்ட கிராமங்களுக்கு வழங்கவிடாமல் அவர்கள் கூறிய பகுதிகளுக்கே நிவாரண பொருட்களை வழங்க வைத்தனர். அந்த பகுதிகளில் குறைந்த அளவே சேதம் ஏற்பட்டிருந்தது. ஆனால் நாங்கள் திட்டமிட்டிருந்த கிராமங்களில் உள்ள மக்கள், புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதனால்தான் நாங்கள் புதுவயல், அரிமளம், தேத்தான்பட்டி போன்ற பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்தோம்.
நாங்கள் திட்டமிட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்காதது எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.