கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 மினி லாரிகளில் ரூ.10 லட்சம் நிவாரண பொருட்கள்

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்களை அனுப்பும் நிகழ்ச்சி திருவான்மியூர் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் நடந்தது.

Update: 2018-11-22 22:45 GMT
அடையாறு,

நிவாரண பொருட்களான காய்கறிகள், பழங்கள், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், பிஸ்கட், நாப்கின் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் என ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் 4 மினி லாரியில் ஏற்றப்பட்டது.

நிவாரண பொருட்களை ஏற்றிய மினி லாரிகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கொடி அசைத்து அனுப்பிவைத்தார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென் சென்னை மாவட்ட தலைவர் மோகன், மாவட்ட துணை தலைவர் பாஸ்கர், மருந்தீஸ்வரர் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் வெற்றி, கவுரவ தலைவர் மார்க்கெட் சிவா, செயலாளர் குமாரசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்