மும்பை ஓட்டல் ஊழியரை தலை துண்டித்து கொன்ற வாலிபர் சிக்கினார் காதல் தகராறில் விபரீதம்

மும்பை ஓட்டல் ஊழியரை தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதல் தகராறில் இந்த விபரீதம் நடந்துள்ளது.

Update: 2018-11-21 23:15 GMT
வசாய், 

மும்பை ஓட்டல் ஊழியரை தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். காதல் தகராறில் இந்த விபரீதம் நடந்துள்ளது.

ஓட்டல் ஊழியர் கொலை

மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தவர் விகாஷ் பவ்தானே(வயது19). இவர் 2 நாட்களுக்கு முன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நாலச்சோப்ராவில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது தலை விரார் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த கொடூர கொலை குறித்து துலிஞ்ச் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில், அவரை பாபுராவ் வாராக்(20) என்பவர் தான் கொலை செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது. அதன் விவரம் வருமாறு:-

காதல் பிரச்சினை

நாலச்சோப்ராவில் வசிக்கும் 12-ம் வகுப்பு மாணவியும், விகாஷ் பவ்தானேவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். அந்த மாணவியை பாபுராவ் வராக் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் 3 பேரும் சத்தாராவில் உள்ள ராமேல் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆவர். பாபுராவ் வாராக் கராடில் வேலை பார்த்து வந்தார். அண்மையில் நாலச்சோப்ரா வந்த அவர் மாணவியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஆனால் மாணவி தான் விகாஷ் பவ்தானேயை காதலிப்பதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அவர் ஆத்திரம் அடைந்தார்.

தலை துண்டித்து கொலை

சம்பவத்தன்று அவர் விகாஷ் பவ்தானேவை இந்த பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு அழைத்தார். இருவரும் நாலச்சோப்ரா பகுதியில் சந்தித்து பேசினர். அப்போது, மாணவியிடம் இருந்து விலகி விடும்படி விகாஷ் பவ்தானேயை பாபுராவ் வாராக் மிரட்டி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே பயங்கர சண்டை உண்டானது.

உடனே பாபுராவ் வாராக் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து விகாஷ் பவ்தானேயின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு, உடலையும், தலையையும் வெவ்வேறு இடங்களில் வீசிச்சென்றது தெரியவந்தது.

மேலும் செய்திகள்