விழுப்புரத்தில்: ஓய்வுபெற்ற நூலக ஊழியர் தீக்குளித்து தற்கொலை
விழுப்புரத்தில், ஓய்வுபெற்ற நூலக ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் ஆசிரியர் நகரில் வசித்து வந்தவர் கமலக்கண்ணன் (வயது 70). இவர் விழுப்புரத்தில் உள்ள நூலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கமலக்கண்ணனின் மனைவி சந்திரா மற்றும் அவரது மகன்கள் கார்த்திகேயன், முத்துநாராயணன் ஆகியோர் திண்டிவனத்தில் நடந்த உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டனர். வீட்டில் கமலக்கண்ணன் மட்டும் தனியாக இருந்தார்.
ஏற்கனவே உடல்நிலை சரியில்லை என்று மனவேதனையுடன் காணப்பட்ட அவர், நேற்று வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கமலக்கண்ணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.