‘வறட்சி குறித்த விவாதம் வேண்டாம், முதலில் நிவாரணம் அறிவியுங்கள்’ அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் வற்புறுத்தல்

வறட்சி குறித்த நிவாரணம் வேண்டாம், முதலில் நிவாரணத்தை அறிவியுங்கள் என்று அரசை எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார்.

Update: 2018-11-20 23:15 GMT
மும்பை, 

வறட்சி குறித்த நிவாரணம் வேண்டாம், முதலில் நிவாரணத்தை அறிவியுங்கள் என்று அரசை எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தினார்.

மராட்டிய மேல்-சபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே பேசியதாவது:-

நடவடிக்கை இல்லை

விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வறட்சி காரணமாக பயிர்கள் நாசமானதால் பிழைக்க வேறு வழியின்றி தவித்து வருகின்றனர்.

ஒருவர் தனக்குத்தானே சிதை மூட்டி தற்கொலை செய்துகொள்வது என்பது மிகவும் மோசமானது. அந்த பரிதாபமும் நடந்து விட்டது.

வறட்சி பாதித்த பகுதி என்று அறிவித்து 22 நாட்கள் ஆன பிறகும் அரசு எந்த நிவாரண நடவடிக்கையிலும் ஈடுபடாததுடன், டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் கூட வழங்கப்படவில்லை.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்படவேண்டும். மேலும் அங்கு படிக்கும் மாணவர்களின் ஒரு வருட படிப்பு செலவை அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்.

விவாதம் வேண்டாம்

வறட்சி பாதித்த பகுதிகளில் கடந்த ஆண்டின் மின்சார கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும்.

எங்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் வரை வறட்சி குறித்த எந்த விவாதமும் தேவையில்லை. முதலில் உடனடியாக நிவாரணத்தை அறிவியுங்கள். பின்னர் நாம் அதுகுறித்து விவாதம் நடத்தலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்