பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற கோரிக்கை

பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-20 22:30 GMT
விக்கிரமங்கலம்,

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் மேலத்தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு, அதில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உள்ளது.

நீர்த்தேக்க தொட்டியின் அருகே குடியிருப்புகள் உள்ளதால் தொட்டி இடிந்து விழும்போது பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்