கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறுவது கண்துடைப்பு நாடகம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறுவது கண்துடைப்பு நாடகம் என பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
சுந்தரக்கோட்டை,
கஜா புயல் பாதித்த பகுதிகளில் பார்வையிடுவதற்காக திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வழியாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், நாகைக்கு சென்றார். அப்போது மன்னார்குடியில் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்த போது கூறியதாவது:-
கஜா புயலால் டெல்டா பகுதியில் மிக பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.
தென்னை, வாழை, மா, பலா போன்ற மரங்கள் முற்றிலும் சாய்ந்துள்ளன. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை. மின்சாரம், குடிநீர், உணவு, உடை போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைக்கவில்லை. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தினரை அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் யாரும் நேரடியாக சென்று சந்திக்கவில்லை. இடைத்தேர்தல் நடைபெற உள்ள பகுதியில் மட்டும் நிவாரண பணிகளை அமைச்சர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற அமைச்சர் ஒருவருக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் முதல்-அமைச்சர் தனது பயணத்தை மாற்றி அமைத்து உள்ளார். இதேபோல தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது பயணத்தை பாதிலேயே ரத்து செய்துள்ளார். இது இவர்கள் மீது மக்கள் கொண்டுள்ள எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.
மின் வினியோகம் முழுமையாக சரி செய்யப்படாத நிலையில் பள்ளிக்களை அவசர அவசரமாக திறக்கக் கூடாது. புயல் பாதிக்கப்பட்ட பகுதியில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக கூறுவது கண்துடைப்பு நாடகம். இவ்வாறு அவர் கூறினார்.