நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ.3 லட்சம் வழிப்பறி: தலைமறைவாக இருந்த வாலிபர் சிக்கினார்
நிதி நிறுவன ஊழியர்களிடம் ரூ. 3 லட்சத்தை வழிப்பறி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் போலீசில் சிக்கினார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதி தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் நேற்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை வழிமறித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து, அவரை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1¾ கிலோ கஞ்சா வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
உடன் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில் அவர், வானூர் அருகே வில்வநத்தம் காலனியை சேர்ந்த ஏழுமலை மகன் மணிகண்டன் (வயது 22 ) என்பதும், கடந்த 3-ந்தேதி விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் 2 பேரிடம் ரூ.2 லட்சத்து 93 ஆயிரத்தை வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடைய கொள்ளையர்களுக்கு உடந்தையாக செயல்பட்டவர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1¾ கிலோ கஞ்சா, ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே நிதி நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா புரத்தை சேர்ந்த சுகுமார், சிலம்பரசன், குறளரசன், சுகன் ஆகியோரை கைது செய்திருந்தனர். இதில் தலைமறைவாக இருந்த மணிகண்டனையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.