நிவாரண பணிகளை பார்வையிட்டார்: ‘கஜா’ புயல் சேதங்கள் ஒரு வாரத்துக்குள் சீரமைக்கப்படும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
‘கஜா’ புயல் சேதங்கள் ஒரு வாரத்துக்குள் முற்றிலும் சீரமைக்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தை நேற்று முன்தினம் ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டது. சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால், மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் மரங்களும், 1,500 மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மின்சாரமும் நிறுத்தப்பட்டது.
காலை 8.30 மணி முதல் சுமார் 4 மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை நீடித்தது. இதையடுத்து மழை குறைந்தது. பின்னர் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சாலைகளில் விழுந்த மரங்கள் முதலில் அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் திண்டுக்கல் குமரன் பூங்கா, கோட்டைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிவாரண பணிகளை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பார்வையிட்டார்.
இதையடுத்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘கஜா’ புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒருவாரத்துக்குள் சீரமைக்கப்படும். நிவாரண பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இன்று மாலைக்குள் (அதாவது நேற்று) மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் மின் வினியோகம் செய்யப்படும்.
வத்தலக்குண்டு, பழனி வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் சாலைகள் சீரமைக் கப்பட்டு விரைவில் போக்குவரத்து தொடங்கும். திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு சேதம் ஏற்படாமல் இன்னும் அதிக புயல்கள் வரட்டும். அப்போது தான் குடிநீர் பிரச்சினை தீரும் என்று அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மண்டல கண்காணிப்பு அலுவலர் மங்கத்ராம் சர்மா, கலெக்டர் டி.ஜி.வினய் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.