தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதித்த பகுதிகளை 3 அமைச்சர்கள் பார்வையிட்டனர்
புயலால் பாதித்த பகுதிகளை 3 அமைச்சர்கள் பார்வையிட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வுக்கூட்டம் தஞ்சை சுற்றுலா ஆய்வு மாளிகையில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துரைக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தனர். அப்போது குடிநீர் வினியோகம், மின்வினியோகம் மற்றும் பொதுமக்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரதீப்யாதவ், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பாஸ்கரன், பேரூராட்சிகள் இயக்குனர் பழனிசாமி, மின்வாரிய கழக தலைவர் விக்ரம்கபூர், கலெக்டர் அண்ணாதுரை, ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் மந்திராசலம், போலீஸ்துறை ஏ.டி.ஜி.பி.க்கள் ரவி, விஜயகுமார், மண்டல ஐ.ஜி. வரதராஜூ, போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கஜா புயல் உருவானதில் இருந்து வானிலை அறிக்கையின்படி முதல்-அமைச்சர் தொடர்ந்து டெல்டா பகுதியை கண்காணித்து அதற்கான குழுக்களை அமைத்து ஆலோசனை கூட்டங்களை 5 முறை நடத்தினார். தேவையான எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டு புயலால் சாய்ந்த மரங்கள், மின்கம்பங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. புயல் பாதிப்பினால் குடிநீர் தட்டுப்பாடு வரக்கூடாது என்பதற்காக முன்கூட்டியே டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலும் தண்ணீரில் நிரப்பப்பட்டது.
தற்போது மின்சாரம் இல்லை என்றால் கூட தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களில் தேவையான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அருகில் உள்ள 8 மாவட்டங்களில் இருந்து பேரூராட்சிகள் சார்பாகவும், 9 மாவட்டங்களில் இருந்து ஊராட்சிகள் சார்பாகவும், 7 மாவட்டங்களில் இருந்து நகராட்சிகள் சார்பாகவும் ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாநகராட்சிகளில் இருந்தும் ஆட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 589 ஊராட்சிகள் உள்ளன. இதில் 387 ஊராட்சிகளுக்கு மின்வாரியம் மூலம் மின்கம்பங்கள் வழங்கப்பட்டு, சேதமான மின்கம்பங்கள் மாற்றப்பட்டு வருகின்றன.
புயல் காரணமாக பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களில் கடுமையாகவும், ஒரத்தநாடு, திருவோணம் ஆகிய ஒன்றியங்களில் பகுதிஅளவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள ஊராட்சிகளுக்கும் 158 ஜெனரேட்டர்கள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சேலம், நாமக்கல், திருப்பூர், திருச்சி, சிவகங்கை ஆகிய பகுதிகளில் இருந்து 398 பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேத கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் தங்கமணி கூறியதாவது:-
கஜா புயல் காரணமாக கிட்டதட்ட 5 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மின்கம்பங்கள் அதிகஅளவில் சேதம் அடைந்து மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் அரசு மருத்துவமனைகளில் மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை 8 லட்சத்து 40 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் 2 லட்சத்து 58 ஆயிரம் மின் இணைப்புகளுக்கு தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 30 சதவீதம் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை சுற்றிலும் அதிகமான மரங்கள் விழுந்து கிடப்பதால் அதை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததும் அங்கு மின்வினியோகம் வழங்கப்படும்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 4 மாவட்டங்களில் 12,371 மின்வாரிய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. திருச்சி மாவட்டத்தில் ஆயிரம் மின்கம்பங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதம் அடைந்துள்ளன. திண்டுக்கல்லில் 50 சதவீதம் மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையை தவிர்த்த மற்ற இடங்களுக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சீரமைப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் துரைக்கண்ணு கூறும்போது, கஜா புயலில் தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரை அதிகஅளவில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அவையெல்லாம் வேளாண்மைத்துறை சார்பில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்-அமைச்சரின் சீரிய நடவடிக்கையினால் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, மின்வாரியத்துறை, வேளாண்மைத்துறை ஆகியவற்றின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் பெரும்சேதங்கள் தவிர்க்கப்பட்டு உயிரிழப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. வாழை, தென்னை மரங்கள் கணக்கெடுப்பு முடிந்ததும் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் தஞ்சை சீனிவாசபுரம் சேப்பனாவாரி பகுதியில் வீட்டின் மீது மரம் விழுந்ததில் தாய், மகன் ஆகிய 2 பேர் காயம் அடைந்தனர். அவர்களது குடும்பத்திற்கு சென்று அமைச்சர்கள் 3 பேரும் ஆறுதல் கூறியதுடன கட்சி சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினர். அப்போது நிவாரண உதவியை பெற்ற பாப்பாத்தி கீழே மயங்கி விழுந்தார். உடனே அவரது முகத்தில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் சகஜநிலைக்கு வந்தார்.
பின்னர் 3 அமைச்சர்களும் தெலுங்கன்குடிகாட்டில் சாய்ந்து கிடந்த தென்னை மரங்களையும், திப்பியக்குடியில் சேதம் அடைந்த துணை மின் நிலையத்தையும் பார்வையிட்டனர். தொடர்ந்து வீரக்குறிச்சி, அலிவலம், துறவிக்காடு, திருச்சிற்றம்பலம் ஆகிய கிராமங்களில் கஜா புயலால் சேதம் அடைந்த தென்னை மரங்களை பார்வையிட்டனர். அப்போது எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராசு, மாவட்ட பால்வளத்தலைவர் காந்தி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.