புயலால் சேதமடைந்த வாழைகளை எம்.எல்.ஏ. ஆய்வு

கஜா புயல் காரணமாக வீசிய காற்றினால் ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது. இதையடுத்து நேற்று குளித்தலை எம்.எல்.ஏ.ராமர் நேரில் சென்று ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

Update: 2018-11-17 22:15 GMT
நச்சலூர்,

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்தலூர் காலனி, கட்டாணிமேடு, கவுண்டம்பட்டி,முதலைப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள வாழை மரங்கள் நேற்று முன்தினம் கஜா புயல் காரணமாக வீசிய காற்றினால் ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது. இதையடுத்து நேற்று குளித்தலை எம்.எல்.ஏ.ராமர் நேரில் சென்று ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் சேதமடைந்த வாழை மரங்கள் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். அப்போது விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்