தகிசரில், தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு பலி
தகிசரில் தண்ட வாளத்தை கடக்க முயன்ற 2 வாலிபர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
மும்பை,
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள தகிசர் ரெயில் நிலைய பகுதியில் சம்பவத்தன்று மாலை வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த ரெயில் அவர் மீது மோதி சென்றது. இதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை ரெயில்வே போலீசார் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தகிசரை சேர்ந்த ராஜ்குமார் கனோஜியா(வயது25) என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் தகிசரை சேர்ந்த அஜய் பாரிக் என்ற வாலிபரும் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்படி இரு சம்பவங்கள் குறித்தும் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.