இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பயிற்சிப் பணி
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு 523 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. இதன் வடக்கு மண்டல மார்க்கெட்டிங் பிரிவில் தற்போது அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு வி்ண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பிரிவுகளில் மொத்தம் 523 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கு 228 இடங்களும், டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு 295 இடங்களும் உள்ளன.
இந்த பயிற்சிப் பணியிடங்களில் சேர விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31-10-2018-ந் தேதியில் 18 வயது முதல் 24 வயது வரை இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதி
10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கும், 3 ஆண்டு என்ஜினீயரிங் டிப்ளமோ படிப்பு டெக்னீசியன் பயிற்சிப் பணிக்கும், 3 ஆண்டு பட்டப்படிப்பு படித்தவர்கள் தொழில்நுட்பம் சாராத பிரிவு பயிற்சிப் பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 17-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். https://www.iocl.com/ என்ற இணையதள பக்கத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.