பிரம்மதேசம் அருகே: மர்ம காய்ச்சலுக்கு 8 மாத குழந்தை பலி

பிரம்மதேசம் அருகே மர்மகாய்ச்சலுக்கு 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

Update: 2018-11-11 22:00 GMT
பிரம்மதேசம், 


விழுப்புரம் மாவட்டம் பிரம்மதேசம் அருகே உள்ள வடகொளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் எழிலரசன். இவருடைய மனைவி கோமதியம்மாள். இவர்களுக்கு 8 மாதத்தில் யுவஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் குழந்தை யுவஸ்ரீ கடந்த 5 நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டாள். இதையடுத்து அவளை சிகிச்சைக்காக பிரம்மதேசத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுமியின் பெற்றோர் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமாகவில்லை.

இதையடுத்து யுவஸ்ரீயை திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவளது உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து யுவஸ்ரீ புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு யுவஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மர்மகாய்ச்சலுக்கு 8 மாத குழந்தை பலியான சம்பவம் வடகொளப்பாக்கம் கிராமத்தில் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்