குன்றத்தூரில் பன்றி காய்ச்சலுக்கு பெண் பலி

குன்றத்தூரில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-11-07 22:00 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர், கந்தசாமி நகரை சேர்ந்தவர் பாலாஜி (46), இவரது மனைவி ஜெயா(40). கடந்த சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த ஜெயாவை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு பரிசோதனை செய்ததில் ஜெயாவிற்கு பன்றி காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சாவு

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜெயா சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குன்றத்தூர் பகுதியில் முறையாக சுகாதார பணிகள் மேற்கொள்ளாமல் போனதே பன்றி காய்ச்சல் பரவுதலுக்கு காரணம் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.

மற்றவர்களுக்கும் பன்றிகாய்ச்சல் பரவாமல் தடுக்க பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்