திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை

திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

Update: 2018-11-05 22:00 GMT
திருப்பூர், 

நாடு முழுவதும் இன்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளதால் திருப்பூருக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற வண்ணம் இருந்தனர். தமிழகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்ட நிலையில், வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலானவர்கள் நேற்று இரவு தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். நேற்று மாலையில் இருந்தே அவர்கள் திருப்பூர் ரெயில் நிலையத்தில் மூட்டை முடிச்சுகளுடன் அதிக அளவு கூடி இருந்தனர். 

டிக்கெட் கவுண்ட்டரில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து கொண்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காகவும், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் போலீசார் ரெயில் நிலையத்தில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள பயணிகள் பட்டாசுகள் ஏதாவது வைத்துள்ளனரா? என்பது குறித்தும் சோதனை நடத்தினார்கள். வடநாட்டினர் அதிகம் ரெயில் நிலையத்தில் திரண்டு இருந்ததால் அங்கு நேற்று இரவு பரபரப்பாகவே காணப்பட்டது. 

மேலும் செய்திகள்