புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை நகர் பகுதிகளில் தினமும் காலை, மாலை இரு வேளைகளில் கொசு மருந்து அடிக்கப்படுகிறது. இந்த பணி தொய்வின்றி நடைபெறும். மேலும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டெங்கு கொசு உற்பத்திக்கான காரணிகள் கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப் படும். குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என்றார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், நகர்நல அலுவலர் யாழினி, சுகாதார ஆய்வாளர்கள் பரக்கத்துல்லா மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.