நடிகர் துனியா விஜய் உள்பட 7 பேருக்கு நோட்டீஸ்

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாக வழக்குப்பதிவு செய்து நடிகர் துனியா விஜய் உள்பட 7 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Update: 2018-11-03 22:57 GMT
பெங்களூரு,

நடிகர் துனியா விஜய், உடற்பயிற்சியாளர் மாருதி கவுடாவை தாக்கியது தொடர்பாக ஐகிரவுண்டு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வேளையில் துனியா விஜயின் முதல் மனைவி நாகரத்னா, 2-வது மனைவி கீர்த்தி கவுடா இடையே பிரச்சினை உருவானது. இதுதொடர்பாக 2 பேரும் தனித்தனியாக கிரிநகர் போலீசில் புகார் செய்தனர். அத்துடன் துனியா விஜய்-நாகரத்னா தம்பதியின் மகள் மோனிகாவை தாக்கியதாக நடிகர் துனியா விஜய் உள்ளிட்டவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதுபோன்ற தொடர் புகார்களால் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, சட்டம்-ஒழுங்கிற்கு சீர்குலைவு ஏற்படுத்துவதாக கூறி கிரிநகர் போலீசார் நடிகர் துனியா விஜய், அவருடைய முதல் மனைவி நாகரத்னா, 2-வது மனைவி கீர்த்தி கவுடா உள்பட 7 பேர் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தென்மண்டல துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை முன்பு ஆஜராக வேண்டி நடிகர் துனியா விஜய் உள்பட 7 பேருக்கும் கிரிநகர் போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் 7 பேரும் நாளை(திங்கட்கிழமை) விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.

மேலும் செய்திகள்