ஒலி, காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை தவிர்க்க வேண்டும் கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தல்

ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஆசியா மரியம் அறிவுறுத்தி உள்ளார்.

Update: 2018-11-03 22:30 GMT
நாமக்கல்,

தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வண்ணம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வலியுறுத்தி உள்ளது.

அதன்படி, நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும் ஆண்டுதோறும் பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள் 1.125 டெசிபல் அளவிற்கு மேல் ஒலி எழுப்பும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது. சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படாத பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. மேலும் பொதுமக்கள் நிர்ணயம் செய்யப்பட்ட 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். 2.125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும்.

தீபாவளி பண்டிகை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத்திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியினைக் கொண்டாட வேண்டும். ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளை தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால், தீபாவளியை அனைவரும் கொண்டாடுவோம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்