ஆரணியில் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு

ஆரணியில் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தினர்.

Update: 2018-11-03 22:45 GMT
ஆரணி,

தீபாவளி பண்டிகையையொட்டி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் செந்தில்குமார், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ரவி மற்றும் அலுவலர்கள் நேற்று ஆரணி நகரில் உள்ள ‘ஸ்வீட்’ கடைகளில் பாதுகாப்பான முறையில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கிறார்களா?, காலாவதியான உணவு பொருட்களை வைத்துள்ளார்களா?, பாதுகாப்புடன் பணியாளர்கள் பணிபுரிகிறார்களா? என ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது இனிப்பு தயாரிப்பு கூடங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் சுத்தமில்லாத சில கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்