செங்கிப்பட்டியில் காவலாளி கொலை: 2 சிறுவர்கள் கைது
செங்கிப்பட்டியில் நடந்த காவலாளி கொலை வழக்கில் 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளப்பெரம்பூர்,
தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது55). இவர் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள மருந்து உற்பத்தி நிறு வனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி இரவு பணியில் இருந்தபோது ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த 4 மாதங்களாக இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு வல்லத்தில் உள்ள கோவிலில் கொள்ளை நடந்தது தொடர்பாக சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் செங்கிப்பட்டியில் நடந்த காவலாளி ராஜேந்திரன் கொலை வழக்கு குறித்து போலீசாருக்கு துப்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து கொள்ளை வழக்கை விசாரித்த குற்றப்பிரிவு போலீசார், செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் 15 வயதுடைய 2 சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் நிறுவனத்தில் கொள்ளை அடிக்க முயன்றார்களா? ராஜேந்திரனை கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4 மாதங்களுக்கு பிறகு கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்த வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினரை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பாராட்டினார்.