அரப்பனஹள்ளி அருகே கரும்பு தோட்டத்தில் 3 குட்டிகளுடன் படுத்து கிடந்த சிறுத்தை
அரப்பனஹள்ளி அருகே கரும்பு தோட்டத்தில் 3 குட்டிகளுடன் சிறுத்தை படுத்து கிடந்ததால், கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினார்கள்.
சிக்கமகளூரு,
அந்த குட்டிகளையும், சிறுத்தையையும் கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாவணகெரே மாவட்டம் அரப்பனஹள்ளி தாலுகா கடச்சி கிராமத்தை சேர்ந்தவர் மகேசப்பா. விவசாயி. இவருக்கு சொந்தமாக அந்தப்பகுதியில் வனப்பகுதியையொட்டி 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தில் மகேசப்பா கரும்பு பயிரிட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவருடைய தோட்டத்தில் கரும்பு அறுவடை செய்யும் பணி நடந்தது. இந்த பணியில், 5 தொழிலாளர் ஈடுபட்டிருந்தனர். அப்போது தொழிலாளர்கள் கரும்பை வெட்டிக் கொண்டு வந்தனர்.
அந்த சமயத்தில், அந்த தோட்டத்தில் ஒரு சிறுத்தை, 3 குட்டிகளுடன் படுத்து கிடந்தது. இதனை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், தோட்டத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
மேலும் 3 குட்டிகளுடன் சிறுத்தை கிடப்பது பற்றி அக்கம்பக்கத்து தோட்டத்தில் உள்ளவர்களுக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களும் தோட்டத்தில் இருந்து வெளியேறினார்கள். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, அங்கு சிறுத்தை எதுவும் இல்லை.
அந்த சிறுத்தை தனது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு பதிவாகி இருந்த கால்தடங்களை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அந்தப்பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள், சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரிந்ததும், தங்கள் தோட்டங்ளுக்கு செல்ல முடியாமல் உள்ளனர். இதனால், அந்த சிறுத்தையையும், அதன் குட்டியையும் வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை வனத்துறையினர் ஏற்றுக்கொண்டு, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து விரைவில் கூண்டு வைக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.