ஓட்டப்பிடாரம் அருகே நலவாழ்வு மையம் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்
ஓட்டப்பிடாரம் அருகே காட்டுநாயக்கன்பட்டியில் நலவாழ்வு மையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே காட்டுநாயக்கன்பட்டியில் உள்ள துணை சுகாதார நிலையத்தில், மாவட்ட பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் நலவாழ்வு மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். கோவில்பட்டி சுகாதார துணை இயக்குனர் டாக்டர் போஸ்கோ ராஜா வரவேற்றார். விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து கிராம செவிலியர்களுக்கு மடிக்கணினி, செல்போன் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்கள் உடல் நலக்குறைவு ஏற்படும்போது ஆஸ்பத்திரியை தேடி போகும் காலம் மாறி, மக்களை தேடி மருத்துவர்கள் செல்லும் நிலை வந்து விட்டது. இந்த திட்டத்தை நிறைவேற்ற முதல் கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு மக்கள் நலவாழ்வு மையமாக மாற்றப்பட்டு உள்ளது. இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும். மேலும் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட சுகாதார மையத்தில் மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் விரைவில் இடைத்தேர்தலை சந்திக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் நாகலாபுரத்தில் அரசு கல்லூரியும், எப்போதும்வென்றானில் நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. வைப்பாறு மக்களின் குடிநீர் வசதிக்காக தடுப்பணை கட்டப்பட்டது. இதுபோன்று மேலும் பல நல்ல திட்டங்களை தர நீங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், நெல்லை ஆவின் பால் தலைவர் என்.சின்னத்துரை, கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, மருத்துவ இணை இயக்குனர் பரிதாஷெரின், ஓட்டப்பிடாரம் தாசில்தார் காளிராஜ், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் நவநீதகிருஷ்ணன், கூடுதல் ஆணையாளர் இசக்கியப்பன், மண்டல துணை தாசில்தார் கண்ணன், மாவட்ட மருத்துவ நலவாழ்வு அலுவலர் பகவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓட்டப்பிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் தங்கமணி நன்றி கூறினார்.