தீபாவளி பரிசு பொருளுக்கு பதிலாக அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தீபாவளி பரிசு பொருளுக்கு பதிலாக அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் ரூ.1000 வழங்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுவை மாநில வளர்ச்சிக்கு ஒற்றுமையாக இருந்து எதையும் செய்ய முடியாத முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பெடி ஆகியோர் தேச ஒற்றுமைக்கான நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி இருப்பது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இருவரின் வரம்பு மீறிய கருத்து மோதலால் புதுவை மாநிலத்தின் வளர்ச்சியே கேள்விக்குறியாக உள்ளது.
எல்லை தாண்டிய பயங்கரவாதிகள், கடத்தல் குற்றவாளிகள் தான் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். உச்ச கட்ட கருத்து மோதலால் கவர்னர், முதல்-அமைச்சரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என வரம்பு மீறி பேசுகிறார். இது அநாகரீகத்தின் உச்ச கட்டம். இதே போல் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் சில நேரங்களில் வரம்பு மீறி பேசுகிறார். இது புதுவைக்கு தலை குனிவை ஏற்படுத்தும் செயல்.
கவர்னர் கிரண்பெடி நேற்று (நேற்று முன்தினம்) அதிகாரிகளை வைத்துக்கொண்டு பாராட்டு விழா நடத்தியுள்ளார். அதில் பேசிய கவர்னர் கிரண்பெடி கடந்த 18 ஆண்டுகளாக புதுவையில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படவில்லை என கூறியுள்ளார். ஆனால் ஏரி, குளங்களை தூர்வார ஆண்டு தோறும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் உண்மை என்ன? கவர்னர் கூறுவது உண்மையா? எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள் விளக்கம் தர வேண்டும்.
சமூக பங்களிப்பு நிதியை கவர்னர் கிரண்பெடி முறைகேடாக வசூலிக்கிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டினார். இதனை கவர்னர் கிரண்பெடி மறுத்தார். ஆனால் நேற்று(நேற்று முன்தினம்) சமூக பங்களிப்பு நிதி வழங்கியவர்கள் கவர்னர் மாளிகையில் கவுரவிக்கப்பட்டுள்ளனர். இது உண்மைக்கு புறம்பாக உள்ளது. இது குறித்த வெள்ளை அறிக்கையை கவர்னர் மாளிகை வெளியிட வேண்டும்.
தீபாவளி பண்டிகையின் போது இலவச துணிகள், சர்க்கரை, அரசி வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காலதாமதம் ஆகி விட்டதால் பொருட்களுக்கு பதிலாக பணமாக வழங்க வேண்டும் என்று நாங்கள் முதல்-அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அப்போது முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எங்களிடம் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.1000 வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் இது தொடர்பாக அமைச்சரவையில் பேசி முடிவு எடுப்பதாக கூறினர்.
புதுவையில் மொத்தம் 3லட்சத்து 42 ஆயிரத்து 481 ரேஷன்கார்டுகள் உள்ளன. இதில் மஞ்சள் நிற ரேஷன்கார்டுகள் 1 லட்சத்து 64 ஆயிரத்து 945. அவர்களுக்கு தலா ரூ.675 மட்டும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது இலவச அரிசி மற்றும் சர்க்கரைக்கு உள்ள பணம். எனவே எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குறுதி அளித்தபடி தீபாவளி பரிசு பொருட்களுக்கு பதிலாக அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் தலா ரூ.1000 வழங்க வேண்டும். அதனை அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோரில் ஏழை எளிய மக்கள் பலர் மஞ்சள் ரேஷன்கார்டு வைத்துள்ளனர். அரசு ஊழியர்கள் பலர் சிவப்பு ரேஷன்கார்டு வைத்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.