கட்டிடங்களுக்கு இடையே கேபிள் வயரில் தொங்கிய போதை ஆசாமி

கட்டிடங்களுக்கு இடையே கேபிள் வயரில் தொங்கிய போதை ஆசாமி கீழே விழுந்ததில் அவருடைய கை, கால் முறிந்தது

Update: 2018-11-01 23:29 GMT
மும்பை,

மும்பை பைதோனியில் உள்ள 2 கட்டிடங்களுக்கு இடையே கேபிள் வயர் ஒன்று இருந்தது. இந்த வயரில் நேற்று மாலை 3 மணி அளவில் ஒரு வாலிபர் தொங்கி கொண்டு மற்றொரு கட்டிடத்தை நோக்கி நகர்ந்து சென்றதை அக்கம் பக்கத்தினர் கண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கேபிள் வயரை பிடித்து தொங்கி கொண்டிருந்த வாலிபரை கீழே வரும்படி சத்தம் போட்டனர். ஆனால் வயரில் தொங்கி கொண்டிருந்த வாலிபர் திடீரென கைபிடி நழுவி கீழே விழுந்தார். இதில் வாலிபரின் கை, கால் முறிந்ததால் உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்த வாலிபரின் பெயர் ஜாவேத் அஸ்ரப் என்பதும், அப்பகுதியில் போதைப்பொருள் விற்று வந்ததும் தெரியவந்தது. எதற்காக அவர் கேபிள் வயரை பிடித்து தொங்கினார் என்பதை கண்டறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்