சட்டவிரோதமாக ரெயில் இ-டிக்கெட்டுகள் விற்ற 2 பேர் கைது

மும்பை தாதர் ரானடே ரோடு பகுதியில் சட்டவிரோதமாக ஆன்லைன் மூலம் தொலைதூர ரெயில் இ-டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Update: 2018-11-01 23:16 GMT
மும்பை,

போலீசார் ரானடே சாலையில் உள்ள ஸ்ரீ கட்டிடத்தில் இயங்கி வந்த பிரிதம் ஹாலிடேஸ் என்ற கடையில் போலி வாடிக்கையாளரை அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் அங்கு போலி டிக்கெட்டுகள் விற்கப்படுவது உறுதியானது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 91 இ-டிக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 17 ஆயிரம் ஆகும். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். மேலும் வேறு யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்