திங்கள்சந்தை அருகே கல்லூரி பஸ் கண்ணாடி உடைப்பு வாலிபர் கைது

திங்கள்சந்தை அருகே கல்லூரி பஸ்சின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2018-11-01 22:30 GMT
அழகியமண்டபம்,
நாகர்கோவில் அருகே உள்ள கல்லூரியின் பஸ் ஒன்று நேற்று காலை திங்கள்சந்தை பகுதியில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரி நோக்கி சென்று கொண்டு இருந்தது.

அந்த பஸ்சின் பின்னால் குருந்தன்கோடு அருகே உள்ள முக்லம்பாடு பகுதியை சேர்ந்த ஆல்வின் (வயது 26) என்பவர் கார் ஓட்டி வந்தார். அவர் பஸ்சை முந்தி செல்ல முயன்ற போது, பஸ் டிரைவர் வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆல்வின் பஸ்சை முந்தி சென்று காரை நிறுத்தி, டிரைவருடன் தகராறு செய்தார். பின்னர் கல்லை எடுத்து பஸ் முன்புற கண்ணாடியில் வீசினார். இதில் கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்த மாணவ-மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்கள்.

இந்த சம்பவம் பற்றி இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆல்வினை கைது செய்தனர். ஆல்வின் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் என்பதும், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்