இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் இன்று ஓய்கிறது: ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் - மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார்
ஓட்டுப் பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறினார்.
பெங்களூரு,
மண்டியா உள்பட 5 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான பகிரங்க பிரசாரம் இன்றுடன் (வியாழக்கிழமை) ஓய்கிறது. இந்த தேர்தலில் ஓட்டுப் பதிவுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் கூறினார்.
சிவமொக்கா, பல்லாரி, மண்டியா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.
பல்லாரி, ஜமகண்டி ஆகிய 2 தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, சிவமொக்கா, ராமநகர் ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் போட்டியிட்டுள்ளன. பா.ஜனதா சார்பில் 5 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இதையொட்டி இடைத்தேர்தல் களத்தில் 31 வேட்பாளர்கள் உள்ளனர். குறிப்பாக சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பாவின் மகன் மது பங்காரப்பாவும், பா.ஜனதா சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா ஆகியோரும், பல்லாரி தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் சகோதரி சாந்தாவும், காங்கிரஸ் சார்பில் உக்ரப்பாவும், மண்டியாவில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் சிவராமேகவுடாவும், பா.ஜனதா சார்பில் டாக்டர் சித்தராமையாவும் போட்டியிட்டுள்ளனர்.
அதே போல் ராமநகர் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியும், பா.ஜனதா சார்பில் காங்கிரசை சேர்ந்த லிங்கப்பா எம்.எல்.சி.யின் மகன் சந்திரசேகரும், ஜமகண்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆனந்த் நியாமகவுடாவும், பா.ஜனதா சார்பில் ஸ்ரீகாந்த் குல்கர்னியும் களத்தில் உள்ளனர். முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, பரமேஸ்வர், தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதே போல் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி சதானந்தகவுடா, ஷோபா எம்.பி., ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ. உள்பட முன்னணி தலைவர்கள் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பகிரங்க பிரசாரம் இன்று(வியாழக்கிழமை) மாலை ஓய்கிறது. 3-ந் தேதி அதாவது நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான ஏறபாடுகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பல்லாரி, மண்டியா, சிவமொக்கா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அன்றைய தினம் காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். இதற்காக 5 தொகுதிகளிலும் 6,453 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 57 வாக்குச்சாவடிகள் ‘பிங்க்‘ வாக்குச்சாவடிகள் ஆகும். அவற்றில் பெண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுவார்கள்.
1,502 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். வாக்குச்சாவடிகள் ‘வெப் கேமராக்கள்‘ மூலம் கண்காணிக்கப்படும். 1,312 நுண்ணிய தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலில் முறைகேடுகளை தடுக்க 273 கண்காணிப்பு குழுக்கள், 168 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இடைத்தேர்தலில் 54 லட்சத்து 54 ஆயிரத்து 275 வாக்காளர்கள் ஓட்டுப்போட தகுதி படைத்தவர்கள் ஆவார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 27 லட்சத்து 21 ஆயிரத்து 85 பேரும், பெண் வாக்காளர்கள் 27 லட்சத்து 30 ஆயிரத்து 949 பேரும், பிற வாக்காளர்கள் 462 பேரும், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்காளர்கள் 1,779 பேரும் உள்ளனர். இந்த வாக்காளர்களுக்கு 100 சதவீதம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் களத்தில் 31 வேட்பாளர்கள் உள்ளனர். இந்த இடைத்தேர்தல் பணிகளில் 35 ஆயிரத்து 495 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 416 அதிகாரிகள் வாக்கு எண்ணிக்கை மைய மேற்பார்வையாளர்களாகவும், 416 அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கையிலும் ஈடுபடுகிறார்கள். ஆக மொத்தம் வாக்கு எண்ணிக்கை பணியில் 1,248 ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள்.
வாக்காளர் சீட்டுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 2 நாட்களுக்கு அதாவது நாளை(இன்று) மாலை 6 மணி முதல் 3-ந் தேதி நள்ளிரவு வரை மதுபானம் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 6-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் காலை 6 மணி முதல் நள்ளிரவு வரை மதுபானம் விற்க அனுமதி இல்லை.
இந்த இடைத்தேர்தலில் 18 ஆயிரத்து 260 மின்னணு வாக்கு எந்திரங்கள் மற்றும் 8,922 வி.வி.பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டிலேயே முதல் முறையாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகன வசதியை பெற மாற்றுத்திறனாளிகள் நாளை(இன்று) நள்ளிரவு 1 மணி வரை ‘சுனாவனா‘ என்ற செல்போன் செயலியில் முன்பதிவு செய்யலாம். தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 12 புகார்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சஞ்சீவ்குமார் கூறினார்.