இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிப்பு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
நெல்லை மாவட்டத்தில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திரா காந்தி சிலை மற்றும் உருவப்படங்களுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திரா காந்தி சிலை மற்றும் உருவப்படங்களுக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தென்காசி– கடையம்
நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தென்காசியில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. ஆசாத் நகரில் உள்ள இந்திரா காந்தி உருவ சிலைக்கு, மாவட்ட தலைவர் பழனி நாடார் மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்ச்சியில் மாநில பேச்சாளர் எஸ்.ஆர்.பால்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கடையம் தெற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தெற்கு வட்டார தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி சோமசுந்தரம், வட்டார பொதுச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கடையம் வடக்கு வட்டார தலைவர் மாரியப்பன், மாவட்ட கலைப்பிரிவு தலைவர் அழகுதுரை என்ற அருணாசலம், மாணவர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் மாரிக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதே போல் கடையம் உடையார் பிள்ளையார் கோவில் மற்றும் பொட்டல்புதூர் ஆகிய இடங்களிலும் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
வள்ளியூர்–வாசுதேவநல்லூர்
வள்ளியூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திரா காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர காங்கிரஸ் தலைவர் சீராக் இசக்கியப்பன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் சுயம்புலிங்கத்துரை, மாநில நிர்வாகி வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
வாசுதேவநல்லூரில் நெல்லை மேற்கு மாவட்டம் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடந்த நிகழ்ச்சியில், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் உள்பட பலர் கலந்துகொண்டு, இந்திரா காந்தி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இளைஞர் காங்கிரஸ் செயலாளர் வேல்ராஜ் நன்றி கூறினார்.
களக்காட்டில் நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.