கேனன் டிஜிட்டல் கேமரா
ஸ்மார்ட்போன் வந்தபிறகு கேமராக்களின் உபயோகம் குறைந்துவிட்டது என்றாலும், புகைப்பட ஆர்வலர்கள் பெரிதும் விரும்புவது ஸ்மார்ட்போனை விட கேமராவைத்தான்.
கேமராக்களில் எடுக்கும் படப் பதிவுகள் மிகவும் துல்லியமாக இருப்பதுதான் இதற்குக் காரணம். கேமரா தயாரிப்பில் முன்னணியில் உள்ள கேனன் நிறுவனம் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தொடக்கத்தில் பயன்படுத்துவதற்கேற்ற சிறிய ரக கேமராவை அறிமுகம் செய்துள்ளது. கேனன் ஐ.எக்ஸ்.யு.ஸ். 190 என்ற பெயரில் வந்துள்ள இந்த கேமரா 20 மெகா பிக்ஸெல் டிஜிட்டல் கேமராவாகும். கருப்பு நிறத்தில் கையடக்கமான வகையில் இது வந்துள்ளது. இதில் ஆட்டோ ஜூம் வசதி இருப்பது மிகவும் சிறப்பாகும். நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப வை-பை வசதி கொண்டது. இதனால் எடுக்கும் படங்களை ஸ்மார்ட்போனுக்கு மாற்றிக் கொள்ளலாம். அல்லது இதிலிருந்தே பிற சமூக வலைதளங்களுக்கு அனுப்ப முடியும். இதில் 8 ஜி.பி. மற்றும் 16 ஜி.பி. நினைவக கார்டை போடலாம். நீலம் மற்றும் சில்வர் நிறத்திலும் இது வந்துள்ளது. இதன் விலை ரூ.9,295 ஆகும்.