கென்ட் கோல்டு பிரஸ்டு ஜூஸர்

நீர் சுத்திகரிப்பான் உள்பட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் குறிப்பாக சமையலறை சார்ந்த மின்னணு கருவிகளைத் தயாரிக்கும் கென்ட் நிறுவனம் சுவையான பழச்சாறுகளை தயாரிக்க உதவும் ஜூஸரை அறிமுகம் செய்துள்ளது.

Update: 2018-10-31 07:06 GMT
வழக்கமான ஜூஸர்களில் உள்ள மின் மோட்டார் அதிக ஆர்.பி.எம். கொண்டது. இதனால் எளிதில் சூடாகும். இது பழங்களில் உள்ள உயிர்ச்சத்துகளை நீக்கிவிடும். ஆனால் கென்ட் ஜூஸர் மிகச் சிறப்பாக செயல்பட்டு, பழங்கள், காய்கறிகளில் உள்ள உயிர்ச் சத்துகள் கெடாமல் அப்படியே கிடைக்க உதவுகிறது. அவற்றில் உள்ள நார் சத்துகளும் பழச்சாறில் இருப்பதால் பழத்தின் முழு சத்துகளும் உடலுக்கு கிடைக்கின்றன. மேலும் பழங்கள், காய்கறிகளில் உள்ள சாறுகளை மிகச் சிறப்பாக சாறு பிழிந்துவிடும். இதனால் கூடுதலாக பழச்சாறு கிடைக்கும்.

இதில் மிகவும் வலிமை மிக்க மோட்டார் இருப்பதால் விரைவாக செயல்பட்டு ஜூஸ் கிடைக்க வழிவகுக்கிறது. பழச்சாறு வெளியேற வழி இருப்பது இதன் சிறப்பம்சமாகும். இரண்டு வகையான பில்டர்கள் தரப்படுகின்றன. இதில் ஒன்று கேரட், வெள்ளரி, ஆப்பிள் உள்ளிட்ட கடினமான பழங்கள், காய்கறிகளை சாறு பிழிந்து எடுத்து வடிகட்ட உதவுகிறது. மற்றொன்று எளிதில் அரைபடும் தர்பூசணி, தக்காளி, ஆரஞ்சு போன்றவற்றை வடிகட்ட உதவுகிறது.

இதில் ரிவர்ஸ் சுழற்சி என்ற முறை மோட்டாரில் உள்ளது. இதனால் இதை மாற்று திசையில் சுழலச் செய்யும்போது அடைத்துக் கொண்டிருக்கும் பழச் சக்கைகள் உள்ளிட்டவையும் வெளியேறிவிடும். இத்தகைய வசதி வழக்கமாக பயன்படுத்தும் ஜூஸர்களில் கிடையாது. இந்த மாடல் விவரம் கேசி எஸ்.ஜே.502 ஆகும். இதன் நிகர எடை 7.2 கிலோ. சிங்கிள் பேஸ் மோட்டார் உள்ளது. மோட்டார் வேகம் 65 ஆர்.பி.எம். 250 வாட் திறனை வெளிப்படுத்தக் கூடியது.

மேலும் செய்திகள்